உலகம்

மூட்டு வலியிலிருந்து நிரந்தர விடுதலை... நவீன சிகிச்சையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

Published On 2026-01-10 16:42 IST   |   Update On 2026-01-10 16:42:00 IST
  • எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது.
  • எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம்

இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய வாகனங்களை இயக்க என எல்லா விதத்திலும் நமக்கு கால்கள் மிகவும் அவசியம். அவ்விதத்தில் முழங்கால் மூட்டு வலி (Knee Pain) என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் சற்று அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மூட்டுத் தேய்மான சிகிச்சைக்கு புதிய முறையை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை (Cartilage) மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அசத்தியுள்ளார்

வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15-PGDH என்ற புரதத்தைச் செயலிழக்கச் செய்து, உடலில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News