உலகம்
வங்கதேசம் தேசியவாத கட்சி தலைவராக தாரீக் ரகுமான் நியமனம்
- பி.என்.பி. கட்சி தலைவரான கலிதா ஜியா கடந்த மாதம் இறுதியில் காலமானார்.
- லண்டனில் இருந்து 17 வருடத்திற்குப் பிறகு அவரது மகன் தாரீக் ரகுமான் வங்கதேசம் திரும்பி பதவியை பெற்றுள்ளார்.
வங்கதேச தேசியவாத கட்சி தலைவரான கலிதா ஜியா உடல்நிலை சரியில்லாமல் காலமானார். தாரீக் ரகுமான் பி.என்.பி. கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், அவரது தாயார் காலமான நிலையில் தாரீக் ரகுமான் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிலைக்குழு, தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தாரீக் ரகுமான் லண்டனில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி 17 வருடங்களுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பினார். அவரது தாயாரும், வங்கதேசத்தின் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவருமான கலிதா ஜியா டிசம்பர் 30-ந்தேதி காலமானார். அவரது மறைவால் தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில்தான் தாரீக் ரகுமான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட தாரீக் ரகுமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.