இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
தரைவழி தாக்குதலின்போது இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்காணக்கான உடல்கள் கிடக்கின்றன. உடல்கள் கிடக்கும் இடங்களை சென்றடைய முடியவில்லை என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவில் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் தெற்குப் பகுதிக்கு சென்று விட்டனர். மீதமுள்ளோர் வடக்கு காசாவிலேயே தங்கியுள்ளனர். இதில் பலர் வீடுகளில் இருந்து வெளியேறு ஐ.நா. அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
காசாவில் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்காணக்கான உடல்கள் கிடக்கின்றன. உடல்கள் கிடக்கும் இடங்களை சென்றடைய முடியவில்லை என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 747 குழந்தைகள் ஆவர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்திய நிலையில், நேற்று மேலும் ஒரு இஸ்ரேல் பெண் வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றின. இந்தச் சாலையின் குறுக்கே நிற்கும் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி முன்னேறும் வாகனங்களை எச்சரித்து வருகின்றன. இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினரும் தீவிர சண்டையிட்டு வருவதால், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது என தெரிவித்தார்.
போர் குறித்து இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், " நாங்கள் காசா பகுதியில் ஹமாஸை முற்றிலுமாக தகர்க்கப் போகிறோம். அதுதான் இந்தப் போரில் நமது இலக்கு. ஒவ்வொரு ஹமாஸ் சுரங்கப்பாதையையும், ஒவ்வொரு ஹமாஸ் ராக்கெட் லாஞ்சரையும், ஒவ்வொரு ஹமாஸ் தளபதியையும், ஒவ்வொரு ஹமாஸையும் பின்தொடர்ந்து செல்கிறோம். பாலஸ்தீனியர்கள் உட்பட பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களை அழிப்பதற்காக நாங்கள் அவர்களை பின்தொடர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்நிலையில்ற, அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.