போர் குறித்து இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
போர் குறித்து இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், " நாங்கள் காசா பகுதியில் ஹமாஸை முற்றிலுமாக தகர்க்கப் போகிறோம். அதுதான் இந்தப் போரில் நமது இலக்கு. ஒவ்வொரு ஹமாஸ் சுரங்கப்பாதையையும், ஒவ்வொரு ஹமாஸ் ராக்கெட் லாஞ்சரையும், ஒவ்வொரு ஹமாஸ் தளபதியையும், ஒவ்வொரு ஹமாஸையும் பின்தொடர்ந்து செல்கிறோம். பாலஸ்தீனியர்கள் உட்பட பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களை அழிப்பதற்காக நாங்கள் அவர்களை பின்தொடர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Update: 2023-10-30 14:35 GMT