உலகம்
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
- இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
- தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.