உலகம்

கோப்புப் படம் 

நைல் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 15 பேர் உயிரிழப்பு

Published On 2026-02-12 10:03 IST   |   Update On 2026-02-12 11:13:00 IST
  • படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்தனர்.
  • மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரம்.

சூடானில் உள்ள நைல் நதியில் நேற்று பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியின் உள்ள ஷெண்டி மாவட்டத்தில் நைல் நதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்திலிருந்து 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

மாயமானவர்களை மீட்க சிறப்பு மீட்புக் குழுக்களையும் போதிய உபகரணங்களையும் அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

2023 முதல் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது, படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பயணிகளை ஏற்றுவது உள்ளிட்டவற்றைத்தால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

Tags:    

Similar News