உலகம்

தாய், தம்பியை கொன்றுவிட்டு பள்ளிக்கு சென்று 6 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது திருநங்கை - கனடா சம்பவத்தில் திடுக்

Published On 2026-02-12 10:35 IST   |   Update On 2026-02-12 10:54:00 IST
  • முதலில் தனது தாய் மற்றும் தம்பியை சுட்டுக்கொன்ற திருநங்கை.
  • தாக்குதலுக்குப் பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ஜ் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவிகள், 2  மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியை உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 18 வயது திருநங்கையான இவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னரே தான் முன்பு பயின்ற பள்ளிக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பள்ளியின் நூலகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரையும் சேர்த்து இந்த சமபவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி, தன்னை திருநங்கையாக அடையாளபப்படுத்தி கொண்டார். சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சனைகள்  இருந்ததாகவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு காரணங்களுக்காக விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.

கனடாவில் 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.  

Tags:    

Similar News