உலகம்

கச்சத்தீவை திரும்ப தருமாறு இந்தியா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்

Published On 2024-04-02 09:17 GMT   |   Update On 2024-04-02 10:56 GMT
  • 1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது
  • கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை

காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.

1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News