இந்தியா எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கட்டும் - ரஷிய அதிபர் மாளிகை விளக்கம்
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
- ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும்