உலகம்

சரணடைய மாட்டோம் என்ற ஈரான்: நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்றார் டிரம்ப்

Published On 2025-06-18 20:52 IST   |   Update On 2025-06-18 20:52:00 IST
  • ஈரான் ஒருபோதும் சரண் அடையாது.
  • இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்- காமேனி

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News