உலகம்

50 கிலோவுக்கு குறைவான மனிதரா வெளியே வராதீங்க: கோரிக்கை விடுத்த சீன அரசு

Published On 2025-04-14 03:43 IST   |   Update On 2025-04-14 03:43:00 IST
  • பலத்த சூறாவளி வீசியதால் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
  • உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

பீஜிங்:

சீன தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

இதையடுத்து, பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. ரெயில், பஸ் சேவை பாதிக்கப்பட்டன.

பீஜிங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. வாகனங்கள், கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்படக் கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது.

Tags:    

Similar News