செய்திகள்

பள்ளியில் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்

Published On 2018-10-25 12:14 IST   |   Update On 2018-10-25 12:14:00 IST
அமெரிக்காவில் பார்டோ பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 2 சிறுமிகள் உடன் படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது.

அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர். அதற்காக கத்தியுடன் வந்த அவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.
Tags:    

Similar News