செய்திகள்

கேரளாவுக்கு கத்தார் நாடு ரூ.34 கோடி நிதி உதவி

Published On 2018-08-19 22:44 GMT   |   Update On 2018-08-19 22:44 GMT
கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
துபாய்:

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

Tags:    

Similar News