null
VIDEO: விஜய் ஹசாரே தொடர்: சதம் விளாசி அசத்திய ரோகித் - கோலி
- மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 83 பந்து சதம் அடித்துள்ளார்.
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.
இந்நிலையில் சீக்கிம்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 61 பந்தில் சதம் விளாசிய மும்பை வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.
மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் இருவரும் அசத்தி வருகின்றனர்.