த.வெ.க. மாநாட்டு முகப்பு வரவேற்பு பேனர்களில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் ஏன்?- ஆதவ் அர்ஜூனா விளக்கம்
- சமூகநீதி கொள்கைகளிலிருந்து விலகியதால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார்.
- அண்ணா, எம்ஜிஆரின் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜயால் மட்டுமே முடியும்.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது த.வெ.க. மாநாட்டு முகப்பு வரவேற்பு பேனர்களில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றது ஏன் என ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அண்ணாவுக்கு அடுத்து வந்தவர்கள் சமூகநீதி கொள்கைகளிலிருந்து விலகியதால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார்.
அண்ணாவின் கொள்கை, அதை பின்பற்றிய எம்ஜிஆர்-ஐ வணங்கும் வகையில் மாநாட்டில் பேனர் வைக்கப்பட்டது.
தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தடைகளை ஏற்படுத்தினார்.
அண்ணாவின் கொள்கைகளை அடுத்து ஒருவர் கடைபிடித்து கொண்டு வர முடியும் என்றால் அது தலைவர் விஜயால் மட்டுமே முடியும்.
அண்ணா, எம்ஜிஆரின் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜயால் மட்டுமே முடியும்.
அண்ணா கூறியதைப்போல் தம்பியே வா தலைமை ஏற்க வா என தலைவர் விஜயை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வார் கூறினார்.