தமிழ்நாடு செய்திகள்

உதயநிதி என்ன தியாகியா? - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

Published On 2025-11-05 15:28 IST   |   Update On 2025-11-05 16:19:00 IST
  • அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும்.
  • உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தவெக முடங்கிவிட்டது. மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகிகள் ஓடி விட்டனர். பதுங்கிவிட்டனர் என்றெல்லாம் பேச்சு.

யார் ஓடியது. உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் கருணாநிதி கைது செய்யும்போது யார் ஓடியது? சொந்த மகனே ஓடினார். திமுகவிற்கு வரலாறு தெரியுமா?

வரலாற்று பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். தவெகவிற்கு வரலாறு தெரியாமல் இல்லை. எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும், உங்களின் சூழ்ச்சிகளை உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியவும் தெரியும்.

என்ன செய்துவிட்டோம்.. மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் கட்சி உருவாக்கி, மக்களிடம் போய் பிரசாரம் செய்தாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பேசினோம்.

அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும். மக்களின் ஒரே நம்பிக்கை தலைவர் விஜய்.

கரூர் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று அரசுக்கு தெரியாது என்றால் உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

கரூர் ஒரு மோசமான இடம் என்றும், அங்கு இருப்பவர் செந்தில் பாலாஜி ஒரு ரவுடி என்று தெரியாதா? என எங்களுக்கு அட்வைஸ் செய்கிறது திமுகவின் வாடகை வாய்கள். இன்னும் 6 மாதங்களில் தெரியும் யார் ரவுடி.. யார் அதிகாரம் பண்றது என்று தெரியும்.

புது அரசியலை உருவாக்க வந்திருக்கிறோம். ஊழல் குடும்பத்தை அழிக்க வந்திருக்கிறோம்.

கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் ஆக்டிங்கை பார்த்திருப்பீர்கள். மறுநாள் காளையில் துபாயில் இருந்து ஒருவர் வந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ தமிழ்நாட்டிற்கு தியாகம் செய்வதற்காக துபாய்க்கு உண்ணாவிரதம் செய்ய போனதுமாதிரியும், அங்கிருந்து மக்களுக்காக ஓடி வந்தது போலவும்.. வந்து ஒரு மணி நேரம் கூட மருத்துவமனையில் அவர் இல்லை.

நமக்க அதிகாரம் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கடைசி நிமிடம் வரை இருந்திருப்போம். ஒரு மணி நேரம் விசிட்டிற்கு பிறகு பேட்டியில், தவெக தலைவரை கேள்வி கேளுங்கள் என்கிறார்.

உங்கள் பொதுச் செயலாளர்கள் தூங்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள். அதற்கு எங்கள் பொதுச் செயலாளர்கள் எவ்வளவோ மேல்.

உங்கள் பொதுச் செயலாளரை (அமைச்சர் துரைமுருகன்) முதலில் எழுந்து ஒரு வாக்கிங் செய்ய சொல்லுங்கள். சட்டசபையில் உட்கார்ந்துக் கொண்டு கிண்டல், கேலி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவை நாவடக்கம் இல்லை அவருக்கு.

எப்போது பார்த்தாலும் சட்டசைபயில் ஐயா உதயநிதி வாழ்க.. உதயநிதி வாழ்க என்கிறார். உதயநிதி என்ன தியாகியா? இதுபோன்று கேள்வி கேட்டால் போதும் என் மீது ஒரு எப்ஐஆர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News