தமிழ்நாடு செய்திகள்

நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்- த.வெ.க. விஜய்

Published On 2025-09-13 15:59 IST   |   Update On 2025-09-13 15:59:00 IST
  • நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்.
  • திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்; திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News