தமிழ்நாடு செய்திகள்
உங்க விஜய் உயிரென வரேன்... இன்ஸ்டாவில் 1 கோடி லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் Selfie வீடியோ
- மாநாட்டில் விஜய் பாடிய 'உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நா' என்ற பாடல் வெளியிடப்பட்டது.
- மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உடன் விஜய் செல்பி வீடியோ எடுத்தார்.
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் விஜய் பாடிய 'உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உடன் விஜய் செல்பி வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், விஜய் வெளியிட்ட செல்பி வீடியோ இன்ஸ்டாவில் 100 மில்லியன் பார்வைகளையும் 10 மில்லியன் லைக்குகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை விஜய் வெளியிட்ட பதிவுகளிலேயே இந்த வீடியோ அதிக பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.