தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தலில் விஜய் தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்

Published On 2026-02-08 13:44 IST   |   Update On 2026-02-08 13:44:00 IST
  • பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது.
  • சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.

சுவாமிமலை:

கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வருகை தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.

தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதே சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறி விட்டது. பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், அது தி.மு.க.விற்கு சாதகமாக போனது. இம்முறை அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அ.ம.மு.க. இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு தி.மு.க.விற்கு கிடைக்காது

எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.

திடீர் சாம்பார், துரித உணவுகளை போல, சில கட்சிகள் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்று கட்சியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வேட்பாளர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கை கூட்டணி என்கிறார்கள். கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு தனித்தனி கட்சி தேவை இல்லை. காங்கிரசை எதிர்த்து தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்றார்.

Tags:    

Similar News