தமிழ்நாடு செய்திகள்

தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாஜக... ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த்

Published On 2026-01-08 14:22 IST   |   Update On 2026-01-08 14:22:00 IST
  • ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம்

விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் வசந்த் தனது பதிவில், "ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இன்று, பாஜக வேண்டுமென்றே 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதால், அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

மெர்சல் படத்திற்கு ஆதரவாக 9 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி தனது பதிவில், "மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் திரைப்படத்தில் தலையிட்டு தமிழ் பெருமையை அசிங்கப்படுத்த முயற்சிக்காதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார். 

Tags:    

Similar News