தமிழ்நாடு செய்திகள்
முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்திடும் விஜய்- வைரலாகும் த.வெ.க.வினரின் விநாயகர் சிலை
- சிலைக்கு அணிந்திருந்த சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது.
- முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சாலைகளிலும், தெருக்களிலும் வித்தியாசமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
ஆனால் இந்த விநாயகர் சிலைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.