தமிழ்நாடு செய்திகள்

மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட் - த.வெ.க. விளக்கம்

Published On 2025-08-20 06:44 IST   |   Update On 2025-08-20 06:44:00 IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது.
  • மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.

மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணாவும், எம்ஜிஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். அப்போது விஜயகாந்த் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது பிரேமலதா தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "விஜயகாந்த் புகைப்படங்களை நாங்கள் எங்கும் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News