தமிழ்நாடு செய்திகள்

பச்சை, மஞ்சள் நிற பஸ்களை 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது 'பிங்க்' கலர் பஸ்தான்- உதயநிதி

Published On 2025-09-17 10:33 IST   |   Update On 2025-09-17 10:33:00 IST
  • ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர்.
  • ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார்.

விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாம் தொலைக்காட்சிகளை பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர். ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர். நான் கூறுகிறேன், கடைசியாக எல்லாத்தையும் 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது பிங்க் கலர் பஸ்தான். இது மகளிர்களான நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் அந்த 'பிங்க் கலர்' பஸ் தான் மற்ற எல்லா பஸ்களையும் ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News