தமிழ்நாடு செய்திகள்

மெர்சல் பட விவகாரம்: அதிமுக பெயரை சொல்லவே விஜய் பயப்படுகிறார் - கடம்பூர் ராஜூ

Published On 2026-02-09 07:21 IST   |   Update On 2026-02-09 07:21:00 IST
  • அதிமுகவை ஊழல் சக்தி என்று விஜய் விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது;

திமுகவை தீயசக்தி என்று தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவை விஜய் நேரடியாக தாக்கி பேசியதால் அதிமுக தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அவ்வ்கையில் தூத்துக்குடியில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "விஜயினுடையது வெற்றிக்கழகம் இல்லை வெற்றுக்கழகம் தான். அதிமுக தான் வெற்றிக்கழகம்

மெர்சல் பட பிரச்சனைக்காக விஜய் என்னிடம் வந்தார். மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது. வாழ்நாள் முழுக்க நன்றிக்கடனாக இருப்பேன் என்று கூறிய விஜய் தற்போது அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்

Tags:    

Similar News