த.வெ.க.-ன் முதல் தேர்தல் பிரசாரம்: ஆளும் தி.மு.க. அரசு மீது விஜய் வைத்த விமர்சனங்கள்
- எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
- நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.
அப்போது, விஜய் ஆளும் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.
எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும்; பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise.
நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் தி.மு.க. அரசு நன்றாக காசு பார்க்கின்றது
அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என தி.மு.க சொன்னது செய்ததா? இப்படியே நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். தி.மு.க-வினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை
டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? மின்கட்டண கணக்கீடு மாதம் தோறும் எடுப்பதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?
இவ்வாறு அவர் கூறினார்.