த.வெ.க.வின் புதிய திட்டம்- மாநாட்டில் அறிவித்த விஜய்
- ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.
- விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சிப் பெயர் அறிவித்தபோது, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்றனர்.
மாநாடு நடத்த முடியாது என்றார்கள். தற்போது, ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.
கூட்டம் எப்படி ஓட்டாக மாறும் என்கிறார்கள். ஆனால், நம் தொடர்பு எல்லாம் மக்களுடன் தான். அது எதிரிக்கு நல்லாவே தெரியும்.
விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.
பெண் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தான் நமது முதன்மை அக்கறை. இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக அரசு அமைப்பதே நமது நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.