தமிழ்நாடு செய்திகள்
வேலை செய்யாத மைக் - விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
- கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேள்வி எழுப்பினார்.
- விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேட்க, 'இல்லை இல்லை' என கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், விஜய் பேச்சை கேட்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்த மக்களும் விஜய் கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்சியில் தனது முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.