த.வெ.க. மாநாடு- மேலும் 5 குழுக்கள் அமைப்பு
- மாநாடு 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
- த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்கள் அமைத்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது.