தமிழ்நாடு செய்திகள்
மக்கள் தீர்ப்பை திருடும் பா.ஜ.க.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது.
- வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.
அரியானாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மக்கள் தீர்ப்பையே திருடுவது அம்பலமாகியுள்ளது, ஆதாரங்கள் வெளியிட்ட பின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.