தமிழ்நாடு செய்திகள்
null
மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து அரசியல் செய்கிறார் முதலமைச்சர்- அண்ணாமலை
- எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வரவில்லை என கனிமொழி பேசுகிறார்.
- எந்த மாநில மெட்ரோவிற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்திருக்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2, 3 முறை தமிழகத்திற்கு வந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வரவில்லை.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வரவில்லை என கனிமொழி பேசுகிறார் என்று தெரியவில்லை.
இந்நிலையாவில் எந்த மாநில மெட்ரோவிற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.