தமிழ்நாடு செய்திகள்
மெரினா கடற்கரையில் கல்விச்சிலை - முதலமைச்சர் #MKStalin திறந்து வைத்தார்
- மெரினா கடற்கரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1.43 கோடி மதிப்பில் கல்விச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றனைத்தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலை வெளியிட்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
'கற்றனைத்தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் கற்றனைத்தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொண்டு வரும் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு, இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் இயக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை விளக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.