தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்- திருமாவளவன்

Published On 2025-09-04 10:48 IST   |   Update On 2025-09-04 10:48:00 IST
  • பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது.
  • திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

சென்னை:

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள டி.டி.வி. தினகரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

டி.டி.வி. தினகரனின் முடிவு அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என நம்புகிறேன் வாழ்த்துகிறேன். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது. திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. அதுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

Tags:    

Similar News