த.வெ.க விஜய்- வி.சி.க இடையே எந்த மோதலும் இல்லை- திருமாவளவன்
- விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
- மேடையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என ஆதவிடம் முன்னரே தெரிவித்தேன்.
இன்றைக்கு கூடிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. புயல் நிவாரண நிதியாக நாங்கள் [விடுதலை சிறுத்தைகள்] ரூ.10 கோடி வழங்கியுள்ளோம்.
பல முறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அவரின் அண்மை பேச்சு கட்சியின் நம்பகத்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இருந்தது. எனது அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். மேடையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது எனது தனிப்பட்ட முடிவு. வி.சி.க.,வுக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை. விஜயயோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோடு, சிக்கலோ ஏற்பட்டது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.