தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
- தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.