தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் நிலவும் பிரச்சனைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-05 21:11 IST   |   Update On 2025-06-05 21:11:00 IST
  • பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை.
  • சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும்.

கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேல்முருகன் கொச்சையாக பேசினார் என்றால் அது அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். யாரும் யாரையும் தரைக்குறைவாக பேசக்கூடாது.

பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை. அப்பா- மகன் இடையேயான அவர்களது சொந்த பிரச்சனை. அது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது. அவர்கள் பேசிக் தீர்த்துக் கொள்வார்கள்.

பாஜக ஆதரவாளர்கள், ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்கள் சமரசம் செய்ய சென்றார்கள் என்றால் அது அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருக்கிறார்கள். அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை.

சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடையே நோக்கமும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News