தமிழ்நாடு செய்திகள்

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது- மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-19 19:29 IST   |   Update On 2025-10-19 19:29:00 IST
  • மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
  • எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான செய்தி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகர், தேனியில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எந்தளவு மழை பெய்தாலும் பாதிப்புகளை தவிர்க்க தயாராக உள்ளோம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை அதிகளவில் பெய்த மாவட்டங்களில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சொல்வது தவறான செய்தி.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News