தமிழ்நாடு செய்திகள்

பயணக் கட்டுரை போட்டியில் இந்தியை திணிக்கும் இந்திய ரெயில்வே - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

Published On 2025-05-05 12:41 IST   |   Update On 2025-05-05 12:41:00 IST
  • இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது.
  • ரெயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!

சென்னை:

மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேன், மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்திய ரெயில்வேயா?

இந்தி ரெயில்வேயா?

இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.

இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல,

இந்தியை திணிப்பது மட்டுமே.

ரெயில்வே நிர்வாகமே,

போட்டி விதிகளை மாற்று! என கூறியுள்ளார்.

Tags:    

Similar News