தமிழ்நாடு செய்திகள்
பா.ஜ.க. சொல்லியே அ.தி.மு.க.-விலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க முயற்சித்தேன் - செங்கோட்டையன்
- யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.
- எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு:
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.
* சாதாரண பெண்ணுக்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி.
* ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் நடந்த கொலைக்காக சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்?
* பா.ஜ.க. என்னை அழைத்து கூட்டணிக்காக பேச வேண்டும் என கூறினர்.
* என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க. பேசியது.
* எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றார்.