அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி - செல்வப்பெருந்தகை
- ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.
- சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்.
* காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும்.
* கடந்த 1996-ம் ஆண்டில் அ.தி.மு.க. எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.
* எங்களது சொந்த தந்தையை தான் டாடி என அழைப்போம். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரையோ டாடி என்கின்றனர்.
* ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.
* சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?
* ராகுல் காந்தி பற்றி ராஜேந்திர பாலாஜிக்கு என்ன தெரியும்.
* தனிநபர் செய்த தவறுகளுக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவது கொடுமையானது.
* காங்கிரஸ் குறித்த தனது கருத்தை ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.