தமிழ்நாடு செய்திகள்

சீமானை இந்நேரம் சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும் - செல்லூர் ராஜு

Published On 2025-01-25 13:08 IST   |   Update On 2025-01-25 13:08:00 IST
  • பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக சீமான் பேசி வருவது தொடர்பாக இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "ஜெயக்குமார் ஏற்கனவே அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நானும் எக்ஸ் பக்கத்தில் இது தொடரபாக பதிவிட்டிருந்தேன். சீமானை இந்நேரம் சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும். ஆளுங்கட்சிதான் அழுத்தம் கொடுக்கணும். ஒவ்வொரு முறையும் முதல்வரும் அவரது மகனும் பெரியார் நினைவிடத்திற்கு சென்று உறுதிமொழி எடுக்கிறார்கள். இது எல்லாம் நாடகம் என்று தெரிகிறது பாருங்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News