தமிழ்நாடு செய்திகள்

ராமதாசுக்கே அதிகாரம்... அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2025-07-08 13:58 IST   |   Update On 2025-07-08 13:58:00 IST
  • தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
  • சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் நபர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-

* பா.ம.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் வலி புரியும்.

* தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

* சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.

* 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க முடிவு.

* சட்டமன்ற தேர்தலில் ஏ, பி, பார்ம்களில் கையெழுத்து போடும் உரிமை எனக்கே உள்ளது.

* வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாகுங்கள் என்றார். 

Tags:    

Similar News