தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி தனியாக கட்சி தொடங்கலாம் - ராமதாஸ் யோசனை

Published On 2025-09-11 10:49 IST   |   Update On 2025-09-11 10:49:00 IST
  • கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.
  • அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

திண்டிவனம்:

பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,

* தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.

* கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் பா.ம.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

* நான் இன்றி அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் வளர்ந்திருக்க முடியாது.

* பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம்.

* கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.

* அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

* பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை.

* பிள்ளையாகவே இருந்தாலும் எனது கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது.

* அன்புமணி ஆதரவாளர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன்.

* இரா. என்ற இன்சியலை தவிர ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது.

* அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியது கட்சிக்கு பின்னடைவு இல்லை.

* என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய், அன்புமணி பேசுவதெல்லாம் பொய் என்றார்.

Tags:    

Similar News