தமிழ்நாடு செய்திகள்

அன்புமணிக்கு ஆதரவாக முதல் குரல் - பா.ம.க. பொருளாளர் பொறுப்பிலிருந்து திலகபாமாவை நீக்கிய ராமதாஸ்

Published On 2025-05-30 12:47 IST   |   Update On 2025-05-30 12:47:00 IST
  • அன்புமணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
  • புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்குகிறார்.

சென்னை:

பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சி நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி விடுத்த அழைப்பை ஏற்று அவரது தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்க சோழிங்கநல்லூரை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அன்புமணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக்கு பிறகு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்குகிறார்.

இதற்கிடையே, திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் அன்புமணிக்கு ஆதரவு தரும் மாவட்ட செயலாளர்களை மாற்றுவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி சையது மன்சூர் உசைனை ராமதாஸ் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News