தமிழ்நாடு செய்திகள்
இந்தி பாட்டா...? தமிழிலேயே நல்லா பாடுவேன்... மேடையில் பாட்டு பாடி அசத்திய எம்.பி திருச்சி சிவா
- இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்