தமிழ்நாடு செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச. 5-ந்தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Published On 2025-09-25 10:02 IST   |   Update On 2025-09-25 14:26:00 IST
  • நமது முன்னணி தலைவர்கள் 9 பேரைக் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
  • வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை, தேர்தலுக்கு முன்பாகவே வழங்கிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரி கணக்கீட்டை விரைவாக நடத்தி மக்கள்தொகை அடிப்படையில், வன்னியர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவிலான இடப்பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், அதுவரையில் 10.5 சதவீத தனி ஒதுக்கீட்டை உடனே பெறுகின்ற வகையில் நீதிமன்றத்தில் போதுமான தரவுகளை அளித்து தடையாணையை நீக்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தும் இதற்காக அறவழியில் போராட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை பல முறை ஈர்த்தும் இருக்கின்றோம்.

ஆனால் நம்முடைய நியாயமான கோரிக்கைக்கும், கூக்குரலுக்கும், இன்றைய தமிழக அரசு, இதுநாள்வரை செவி சாய்க்கவில்லை என்பது, மிகவும் வருத்தத்துக்கும், கடும் கண்டனத்துக்கும் உரியது.

சாதிவாரி கணக்கு எடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயத்தை, தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்து தெளிவுபடுத்தவ, வருகின்ற டிசம்பர் 5-ந் தேதி, காலை முதல் மாலை வரை, தமிழ கத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்திருக்கிறது.

வன்னியர்களின் தனி ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவுபடுத்தவும் நமது முன்னணி தலைவர்கள் 9 பேரைக் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து, வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை, தேர்தலுக்கு முன்பாகவே வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News