தமிழ்நாடு செய்திகள்

9 அமாவாசைகளில் தி.மு.க. அரசின் நாடகம் முடிவுக்கு வந்துவிடும்- பொள்ளாச்சி ஜெயராமன்

Published On 2025-06-07 14:47 IST   |   Update On 2025-06-07 14:47:00 IST
  • திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது.
  • நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டியில் திண்ணை பிரசாரம் நடை பெற்றது.

இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை, வரி, சொத்து வரி என தி.மு.க., அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு கஷ்ட காலம் தான். திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.

இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக என்னிடம் பேசிய தொழிலதிபர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என அழைக்கிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது.

எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, எங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு தாருங்கள் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார். ஆனால் நமது முதலமைச்சரோ இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு, ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல் நாடகம் நடத்தி வருகிறார்.

9 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்ச, ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News