தமிழ்நாடு செய்திகள்

'தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது' - ஜோதிமணி

Published On 2026-02-23 20:51 IST   |   Update On 2026-02-23 20:51:00 IST
  • குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
  • தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை?

கரூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் புகார் அளித்தும் தற்போதுவரை கரூர் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.

பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களைப் பாதுகாப்பதா?

அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News