தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 51% பெண் வாக்காளர்கள்: 2021-ஐ காட்டிலும் அதிகம்

Published On 2026-02-23 22:08 IST   |   Update On 2026-02-23 22:08:00 IST
  • 2021 சட்டசபையின் போது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 50.7 சதவீதம்.
  • தற்போது 51.07 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொண்ட பிறகு இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடி, 77 லட்சத்து, 38 ஆயிரத்து 925 பேர் ஆகும். பெண் வாக்காளர்கள் 2 கோடியே, 89 லட்சத்து, 60 ஆயிரத்து 838 பேர் ஆகும்.

மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 67 லட்சத்து, 7 ஆயிரத்து 380 ஆகும். இதில் பெண் வாக்காளர்கள் 51 சதவீதம் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை விட இது அதிகமாகும்.

2021-ல் 3.09 கோடி ஆண் வாக்காளர்கள் இருந்தனர். 3.19 கோடி பெண் வாக்காளர்கள் இருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 50.7 சதவீதம் ஆகும். ஆண்- பெண் வாக்காளர்கள் இடையிலான வித்தியாசம் 10.15 லட்சமாக இருந்தது. தற்போது அது 12.21 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 51.07 சதவீதம் ஆகும்.

சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 14.64 லட்சமாகும். ஆண் வாக்காளர்கள் 13.64 லட்சமாகும்.

Tags:    

Similar News