தமிழ்நாடு செய்திகள்
நாளை முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக சசிகலா பரபரப்பு பேட்டி
- நாளை மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள்.
- ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை.
தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக, தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சசிகலா தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறைந்த அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது "நாளை பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்" என்றார்.