தமிழ்நாடு செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட துணை நடிகர் மீது புகார்
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க மற்றும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துணை நடிகரான செல்வா என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போல உள்ளே சென்று செல்போனில் அத்துமீறி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் கருவறையில் உள்ள மூலவரையும் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் துணை நடிகர் செல்வா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.